Monday, October 17, 2011

கொல்லும் மெளனம்

கண்ணுக்கு தெரியாத ஓர் சுவர்
மெதுவாய் எழுகிறது நமக்கிடையில்,

உடைத்திட மனம் விளைந்தாலும்
ஏனோ மெளனமாய் நான்.

பழகிய நாட்கள் மனதில்
நிழற் படமாய் ஓட

உன் நட்பை இழக்கும் தைரியம்
இல்லாமல் நான்

வார்த்தைகள் தேடுகிறேன்
என்னை உனக்கு உணர்த்த

தேய்பிறையாகும் நம் நட்பை
வளர்பிறையாக்க வழி தெரியாமல் நான்

திருவிழாவில் தொலைந்த குழந்தை போல்
நீ இல்லாமல் விழிக்கிறது என் மனம்

எனது ஒவ்வொரு முயற்ச்சிக்கும் உனது
விமர்சனத்தை எதிர்நோக்கிய படி நான்

மெளனம் கொல்வாயா இல்லை
மெளனமாய் இருந்து எனைக் கொல்வாயா

எதுவாய் இருந்தாலும் உன் அடி
தொடர தயாராய் நான்








2 comments:

  1. நட்பில் என்றுமே வளர்பிறைதான் தோழி.....வானத்தை மேகம் நிரந்தரமாக மறைக்க இயலாது..அதுபோலவே உங்கள் கண்ணுக்கு தெரியாத சுவரும் இடிக்கப் படும்..

    ReplyDelete
  2. மெளனம் கொல்வாயா இல்லை
    மெளனமாய் இருந்து எனைக் கொல்வாயா// வாயா அது!!!!! சீக்கிரம் பேசுங்கோ

    ReplyDelete