Wednesday, June 26, 2013

எங்க வீட்டுப் பெரிய மனுசனுங்க




இவங்க இரண்டு பேரைப் பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகனும். ஸங்கீத் ராஜ், ஃபென்னி..... எங்க வீட்டுப் பெரிய மனுசனுங்க. ஸ்ங்கீத் என்னோட பையன். மிகவும் அமைதியானவன் ஃபென்னி தங்கையின் பையன். சரியான இரட்டை வாலு . இரண்டு பேருக்கும் வெறும் 6 மாதம் தான் வயது வித்தியாசம். ரெண்டு பேரும் பயங்கர பாசக்கார பயலுகனு நாம நினைக்கிறதுகுள்ள பாகிஸ்தான், இந்தியா மாதிரி சண்டை போட்டுக்குவாங்க. அடுத்த நிமிடம் அன்பு மழையா
பொழிஞ்சுகுவாங்க. இவங்க ஏரியாக்குள்ள எங்க யாருக்கும் “நோ எண்டரி” தான்.

ஃபென்னி மேல எப்போதும் ஒரு தனிப்பாசம் பொங்கி வரும் உள்ளே. நான் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குப் போன போது அவன் 6 மாதக் குழந்தை. என்னிடமே தான் இருந்தான். முதன் முதலில் அவன் “அம்மா” என்றதும் என்னைத்தான். மேலும் என்னுடைய அத்தனை வால்த்தனங்களும் அவனிடம் உண்டு.. அதற்கும் மேல் என்னை அறிவாளினு எங்க வீட்ல ஒத்துக்கர ஒரே ஆள் அவன் தான்.

இவங்க இரண்டு பேரும் பிறந்த பிறகு எங்க பேச்சுக்கள் அத்துணையும் இவங்கள சுத்தியே இருக்கும்.
”ஸ்ங்கீத்துக்கு கீழ் பல்லு முளைச்சுடுச்சு வனி,” நான்
“ஃபென்னிக்கு மேல தான் பல்லு முளைச்சுது அனி” என் தங்கை
”ஸ்ங்கீத்துக்கு ஆப்பிள் வேக வைச்சு குடு, நல்லதாம் உடம்புக்கு, ஃபென்னி சாப்பிடறான்” வனி
“சரி குடுக்கரேன் வனிக்குட்டி” நான்
நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டு இருப்போம் இந்த வாண்டுகளைப் பத்தி.

நான் மும்பையில் இருந்ததால் வருடம் ஒரு முறை தான் ஃபென்னிக்குட்டியை பார்க்க முடியும். ஆனாலும் ஃபென்னி,ஸ்ங்கீத் ரெண்டு பேருக்குள்ளும் இருக்கும் பாசம் மிக மிக அடர்த்தியானது.

இப்பொழுது ஊருக்கு போனால் இரண்டு பேரும் எங்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. ஒரே ஆட்டமா இருக்கும். பெரிய மனுசங்க மாதிரி இரண்டு பேரும் நடந்துக்கரதைப் பார்த்து நாங்க கிண்டல் பண்ணிட்டு இருப்போம்.

இவங்க புராணம் சொல்ல ஆரம்பித்தால் சிந்துபாத் கதை மாதிரி நீண்டுகொண்டே போகும். இருவரும் வளர்ந்து வருவதை பெருமிதத்துடன் பார்த்து, இரசித்தபடியே நாட்கள் நகருகின்றன.

1 comment:

  1. அன்பின் அனிதா ராஜ் - எங்க யாருக்கும் என்பது எங்க எல்லாருக்கும் என இருப்பின் நன்று - ஸங்கீத் ராஜ் - ஃபென்னி - இருவரும் ஒட்டிப் பிறக்க வில்லை எனினும் இரட்டைப் பிள்ளைகளாக வளர்வது நன்று. வீட்டுப் பெரிய மனுசனங்களூக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete