Wednesday, June 26, 2013

தொலைத்த கவிதை



தொலைத்த கவிதையில்
சிதறிய வார்த்தைகளை
நினைவுக்குள் சிறையெடுக்க முயல
சிக்காத வண்ணத்துப் பூச்சியாக
கை நழுவி காணாமல் போகிறது.........

தடயங்கள் தேடி கண்கள் பரபரக்க
வெள்ளைத்தாள்களின் வெறுமையை
நிரப்பிக் கொள்கிறது மனம்.

கணத்த இதயத்தின் பாரம் நீக்க
புதிய எழுத்துக்கள் கொண்டு
தொலைத்த கவிதையை மீட்டு
எடுக்க முயல்கிறேன் மெதுவாக.....

சமாதானமாகத மனம்
சத்தியாகிரகம் செய்கிறது
தொலைத்த எழுத்துக்களை வேண்டி......

மீட்டெடுக்கும் நம்பிக்கையுடன்
தேடல்கள் தொடர்கின்றன அனுதினமும்

1 comment:

  1. அன்பின் அனிதா ராஜ் - எழுதிய கவிதை தொலைந்து விட்டால் - நினைவாற்றல் இல்லை எனின் - மீட்டெடுப்பது மிகவும் கடினம் - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete