Thursday, January 5, 2012

வரமாகிய மகன்



பத்து மாதம் கர்ப்பத்தில் சுமந்து
இன்றுவரை நெஞ்சினில் சுமக்கும்
சுகமான சுமை அவன்

அவன் கண்ணசைவில் பம்பரமாய்
சுற்றுகிறது என் உலகம்

எங்களது சண்டைகளை விசாரித்து
ஒருதலைப் பட்சமாய் தீர்ப்பெழுதும்
எனது நீதிபதியும் அவன்தான்

எனது தவறுகளுக்காய் வாதாடும்
பணம் வாங்காத வக்கீலும் அவன்தான்

எனது குழந்தைதனத்தை மீட்டுக் கொடுத்த
தேவனும் அவன்தான்

எனை அன்பெனும் உருவமாய் செதுக்கும்
அழகான சிற்பியும் அவனேதான்

அவனுக்காகவே மலர்ந்து,மறையும்
மலராய் என் வாழ்க்கை



1 comment:

  1. மிக அருமைங்கோ அக்கா, ஒவ்வொரு வரியிலும் தாய்ப்பாசம் வழிகிறது, கவிதை பாயாசம் போல் இனிக்கிறது.

    ReplyDelete