Wednesday, November 6, 2013

அமைதியாய் நான்


நெடுநாளாக கண்டுகொள்ளாத ஒன்று
திடீரென்று முழுவதுமாய் ஆக்கரமித்து
பெரும் ஆட்டம் போடுகிறது....

அடக்கிவைத்தல் நல்லதென்று...
அடக்கினால் போராளியாக
துள்ளிக் குதிக்கிறது......

அடங்குதல் பாவமென்று
அரிச்சுவடி முதலே
அறிப்பட்டதால் அடக்குதலே
முறையென்று முரசுகொட்டுகிறது
போர்வீரனாய் மனசு..............

போர்சங்குகள் உள்ளத்தில் முழங்க
பெரும யுத்தம் நடக்கிறது உள்ளே
இதழ்களில் புன்னகை ஆடையுடுத்தி
அமைதியான காட்சியாளனாய் நான்

நரம்புகள் புடைத்து, இரத்தங்கள் தெறித்து
சதைகளை கிழித்து மெளனத்தை உடைத்து
வெளிவருகிறது எரிமலையாய் வார்த்தைகள்
வெற்றிப்பூரிப்புடன் எதிராளியை நோக்கி

இப்போது
வெளியில் பெரும் யுத்தம்
உள்ளே அமைதியாய் நான்.

No comments:

Post a Comment