Tuesday, January 3, 2012

வண்ணத்துப் பூச்சி




பறந்து திரிந்த  வண்ணத்துப் பூச்சி ஒன்று
மரத்தின் மேல்  நம்பிக்கை  கூடுகட்ட
வைத்தது புத்தி எனும் வர்ணத்தை அடகாய்......

கூட்டைக் கட்டிய பெருமிதத்தில் மிதக்கையில்
கலைந்தது கூடு புயல் காற்றினால்......

கலைந்த கூடு வெறுமை ஊட்ட
மீண்டும் முனைந்தது  கூடுகட்ட
இம்முறை வைத்தது சுதந்திர வர்ணத்தை அடகாய்......

அழகாய் கட்டிய கூட்டில் அடி எடுத்து வைக்க
பெரும் மழையால் கூடு சிதைய...........

உடைந்த மனதுடன் இன்னுமோர் முயற்ச்சி
இம்முறை அடகு போனது சுயமரியாதை வர்ணம்.......



 
    கட்டுவதும்.....கலைவதுமாய்
    போன வாழ்க்கையில்.........
    இனி
    அடகு வைக்க ஏதுமில்லாமல்
    வண்ணத்துப் பூச்சி
   





மரத்தின் தன்மை புரிய........
சட்டென ஏதோ உள்ளே உடைய
பட்டென பற்றைத் துறந்தது   வண்ணத்துப் பூச்சி




மரங்கள் நிறைந்த காடை விட்டு
விண் நோக்கிப் பறந்தது   வண்ணத்துப் பூச்சி
தன் அத்துணை நிறங்களையும் மீட்டுக் கொண்டு...........

1 comment:

  1. தன் வண்ணங்களோடு வருமென்று வண்ணத்துப் பூச்சியின் வரவுக்காக காத்திருக்கும் மரங்களும் உண்டு. சூழல்கள் வலைக்கலாம்.., ஆனால் சுதந்திரம் இழக்க வேண்டாம். நம்பிக்கையின் அடித்தளத்திலிருந்து கட்டப்பட்ட கூடு என்றும் உறுதியாக இருக்கும். சீற்றங்கள் கடந்த பேரன்பில் நிலைத்த ஆன்மாவின் அர்த்தங்கள் புனிதப்படட்டும். சீவனின் உயிர்ப்புகள் சிலிர்த்து தழைக்க இன்பம் நிரந்தரமாய் தங்கட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete