Wednesday, November 6, 2013

இருத்தலை உணராமல்


இருத்தலை உணராமல்
ஆழ்ந்திருந்தான் ஏதோஒன்றில்
நகர்தலுக்கு முரண்டுபிடித்த
மனதை இழுத்துச்சென்றது புத்தி
தடயங்களே இல்லாது...
நகர்ந்தன கால்கள் மெதுவாக


ஏதேனும் ஓர் நொடி உணரக்கூடும்
என்னாலான வெற்றிடத்தை
அந்த நொடி எங்கே தேடினாலும்
கிடைக்காத தூரத்திலோ அல்லது
திரும்பிவரயியலா ஒற்றையடிப்பாதையிலோ
வெகுதூரம் சென்றிருக்கும் எனக்கு
அவனது தேடுதலை உணர்தல்
சாத்தியமில்லாமலும் போகலாம்

7 comments:

  1. உணர முடிந்தவருக்கு உள்ளத்தில் விலகல் கிடையாது

    ReplyDelete
    Replies
    1. உள்ளத்தில் விலகல் இல்லை...ஆனால் எதார்த்த வாழ்க்கை.....

      Delete
  2. என்ன ஒரு கொலைவெறி உங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.......அமைதியா போனா கொலைவெறியா?????

      Delete
  3. உணர்வுகள் உண்மையானால் உணர்தல் சாத்தியப்படும்.

    ReplyDelete
  4. அன்பின் அனிதா ராஜ்

    இருத்தலை உணராமல் கவிதை அருமை

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


    ReplyDelete