Saturday, November 16, 2013

இருந்துவிட்டு போகட்டுமே



மை தீர்ந்த பேனா,
துணி கிழிந்த குடை,
உடைந்த வளையல்,
சாக்லேட் பேப்பரால்
தோழி செய்த பொம்மை,
நண்பன் ஒருவனின்
கையெழுதிட்ட
கிழிந்த காகிதம்,
தங்கையிடம் சண்டையிட்டு
பிடுங்கிய முகம்
சிதைந்த மரப்பாச்சி,
அம்மாவின் கனவுகள்
புதைந்த ஓர் ஓவியம்,
அப்பாவின் செல்லரித்த
குழந்தை படம்,

இருந்துவிட்டு போகட்டுமே
எனக்கானதாய் என்றுமே
உபயோகமில்லையெனினும்
பெரும் பிரபஞ்சத்தின்
ஓர் மூலையில்.................

8 comments:

  1. அதானே இருந்து விட்டுப் போகட்டுமே... எங்க வீட்ல இன்னும் நிறைய இதுபோல பொக்கிஷமாய் இருக்கத்தான் செய்கிறது அனிதா.

    ReplyDelete
    Replies
    1. பெரிய பெட்டியே இருக்கு...........

      Delete
  2. இனிமையான நினைவூட்டல்களுக்கானவை எப்படி உபயோகமற்றுப்போகும்?

    ReplyDelete
    Replies
    1. நமக்கு...பிறருக்கு உபயோகமில்லையே

      Delete
  3. அருமை... இனிய நினைவுகளும்...

    ReplyDelete