Friday, August 30, 2013

Sorry Grass




காலையில் எப்போதும் பள்ளி வேன் வருவதற்கு 5 நிமிடங்கள் முன்னால் சென்று விடுவோம். இன்று ஏனோ சிறிது நேரம் ஆகிவிட, நடைபாதை வழியாக போகாமல் குறுக்கு வழியாக புல்லில் மேல் நடந்து சென்று சீக்கிரமாக அந்த இடத்தை அடைந்துவிடலாம் என்று புல்லின் மேல் நடக்க ஆரம்பித்தேன்.

என் கைகளைப் பிடித்து நிறுத்தினான் ஸங்கீத்

“ஏண்டா குட்டி,நேரம் ஆச்சுபா, பஸ் போயிடும்,சீக்கிரம் வா”...

“அம்மா நடக்காத...grassku, வலிக்கும்”

ஒரு நிமிடம் ஏதும் புரியவில்லை.

“என்னடா சொல்லர” என்றேன் எரிச்சலாக.....எனக்கு பள்ளி வேனை விட்டு விடுவோமோ என்ற கவலை புத்தி முழுதும் நிறைந்திருந்தது.

 "Grass is a Living thingma, அது மேல நடந்தா,அதுக்கு வலிக்கும், நடைபாதையில ஓடிப் போனா வேனைப் பிடிச்சுடலாம்”

ஒரு நிமிடம் அதிசயத்து போனேன். மெதுவாக அவன் கைகளைப் பற்றி “சரிக்குட்டி நாம சீக்கிரமா ஒடிப் போய் வேனைப் பிடித்து விடலாம் என்று நடைபாதை நோக்கி நடந்தேன்.

”Sorry Grass" என்று ஸங்கீத் புல்லிடம் சொல்லிவிட்டு வந்தான்.
 
வாயடைத்து போனேன். குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கத் தான் செய்கிறது. வாய்விட்டு சொல்ல கொஞ்சம் சங்கடமாக இருந்ததால் மனதிற்குள் மன்னிப்பு கேட்டு விட்டு நடைபாதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

1 comment:

  1. வலைச்சரத்திலிருந்து வந்தேன்.
    //Sorry Grass" என்று ஸங்கீத் புல்லிடம் சொல்லிவிட்டு வந்தான். ..//
    கள்ளமில்லா உள்ளம் என்றும் தங்கட்டும். அது இறைவன் வாழும் இல்லம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete