Thursday, March 1, 2012

கண்ணன் என் காதலன்



நீ இல்லாத தருணங்களில்
தொட்டாச்சிணுங்கியாய்
மனம் எல்லாவற்றிக்கும்
சுனங்குகிறது.

நீர் உறுஞ்சிய
பஞ்சாய் கனக்கிறது
இதயம் நீயில்லாததால்.

நீரில்லாமல் வாடும் செடிபோல
வாடி வதங்கி துவளுகையில்
மழை நீராய் பொழிந்து
உயிரூட்டுகிறாய் என்னை

உனைக் காணாது கண்களில்
திரளும் கண்ணீர்
கீழே விழும் முன்
ஏந்துகிறாய் கைகளில்

உன் சிறு புறக்கணிப்பும்
என்னுள் சுனாமியாய்
கோப அலைகளை எழுப்ப
தேர்ந்த மாலுமியாய்
கரை சேர்கிறாய்
காதல் படகை.

பற்ற வைத்த சூடம் போல்
எரிந்தே போகின்றன
கோபங்கள் எல்லாம்
உன் சன்னிதியில்

எனக்காய் நீ புனையும்
பாசுரங்களை புசித்தபின்
பகலவனை பார்த்த
பனித்துளியாகிறேன்

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும்
சிறு இலைபோல
உன் திகட்டாத பேரன்பில்
திணறித்துத் தான் போகிறேன்

உன்னைவிட
என்னையறிந்தவர்கள்
யாருமில்லை பாரினிலே


No comments:

Post a Comment