Monday, September 16, 2013

ஒற்றை வார்த்தைக்காக



மெளனக் கடலுக்குள் நீந்தும்
வார்த்தைகளுக்குத் தூண்டில்
போடுகிறேன் உணர்வுகளை
அடர்த்தியாக எடுத்துரைக்க

தூண்டிலுக்கு சிக்காத மீனாக
துள்ளிக் குதித்து ஓடிவிட்டன
பல வார்த்தைகள்

சிக்கிய சில வார்த்தைகளோ
ஜீவனிழந்தே உலாவருகின்றன

காத்துக்கிடக்கிறேன்
முட்டையை உடைத்து
வெளிவரும் சரியான
ஒற்றை வார்த்தைக்காக

8 comments:

  1. அருமையான வரிகள்... சகோதரி...

    ReplyDelete
  2. வார்த்தைகள் உங்களுக்குக் கிடைக்காமலா?

    ReplyDelete
    Replies
    1. அப்ப அப்ப வறண்ட நிலமாகிறது

      Delete
  3. அன்பின் அனிதா ராஜ் - அருமை அருமை - சிந்தனை அருமை -

    காத்துக்கிடக்கிறேன்
    முட்டையை உடைத்து
    வெளிவரும் சரியான
    ஒற்றை சொல்லுக்காக
    நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete